வணக்கம்,
ஒரு சராசரி மனிதப்பிறப்பின் இயல்பான எண்ணங்களைக் கொண்டு இந்நூலின் வாயிலாக நான் உங்களை வந்தடைகிறேன் என்பது மட்டும்தான் உண்மை.
நான் எவ்வித மனிதப்பிரிவினை சக்திகளுக்கும் எதிரானவன் என்பதை உங்களிடத்தில் முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். . நூலின் தலைப்பு, தற்கால சூழல், சகமனித மனத்தினுள் எற்றிவைக்கப்பட்டுள்ள
தவறான நியாயங்கள் போன்ற சில காரணங்களைக்கொண்டு தனக்கு சாதகமான முடிவுகளை, தீர்மானங்களை நிறைவேற்றிக்கொள்ளும் மனிதர்களிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ள விரும்புகிறேன் . ஆக நான் எவ்வித மனித பிரிவினை சக்திக்களுக்கும் எதிரானவன் என்பதை உங்களிடத்தில் தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.
இந்நூல், வரலாற்று ஆய்வுநூல் அல்ல. வரலாறாக விரும்பி எழுதிய நூலும் அல்ல.என் கண்முன் நிகழ்ந்த காயங்களின் தொகுப்பு. மனித உயிர்களிடத்தில் ஏவப்படும் மனிதாபிமானமற்ற செயல்களை உங்களோடு பரிமாறிக்கொள்ளும் சிறு ஊடகம்.தற்காலச்சூழலில் ஒரு குறிப்பிட்ட மொழிபேசும் மக்களிடத்தில் காட்டப்பட்ட இன அழிப்பு தொடர்ந்து ஏனைய மொழிபேசும் மக்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாதென்ற மனிதாபிமானச் சேர்க்கை.

தன்னுடைய சதைகளை மெலிந்திடவிடாமல் காத்திட மூன்று வேலை உணவிற்காகவும் , சதைகளும் நரம்புகளும் எழுப்பும் காமத்தினைத் தீர்த்திட எதிர்பாலின உறுப்புகளுக்காகவும் , கால்நீட்டி உருண்டு நெளிந்து சயனிக்கப் போதுமான சிற்றிடத்திற்காகவும் மாபெரும் மனிதப் பேரவலங்களை வெற்றுத் தகவலாகவே பார்க்கத் துணிந்துவிட்ட இந்த மானிடப் பிறவிகளை மாற்றும் சக்தி எனக்கில்லை என்பதை அறிவேன். என் சிந்தனை கொண்ட இளையோர்களுக்கும் மாணவர்களுக்கும் என்னால் இயன்ற விடயங்களை தெரியப்படுத்த விரும்புகிறேன் . எப்படிப்பட்ட மனித அவலங்களையும், ஒரு குறிப்பிட்ட இனமக்களின் மீது காட்டப்படும் மனித அழிப்பையும், மனிதாபிமானமற்று செயல்படும் எத்தகைய அரசினையும் பகுத்தறிவு மிகுந்த வீரமிக்க இளையோர், மாணவர் புரட்சியால் மட்டுமே வென்றெடுக்க இயலும் என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு.
அந்த நம்பிக்கையில் எழும்
புரட்சி என்பது
பிரிவினை வாதம் அல்ல!
தனக்கான வாழ்வாதாரதத்தை
தானே உருவாக்கும் முயற்சி!!
- முயற்சியுடன்,
அடிமை வம்சத்திலிருந்து
பூங்கதிர்வேல்.